Page Loader
"கேஜிஎஃப் 3 ஸ்கிரிப்ட் தயாராகி விட்டது"- இயக்குனர் பிரசாந்த் நீல்
கேஜிஎஃப் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

"கேஜிஎஃப் 3 ஸ்கிரிப்ட் தயாராகி விட்டது"- இயக்குனர் பிரசாந்த் நீல்

எழுதியவர் Srinath r
Dec 07, 2023
12:52 pm

செய்தி முன்னோட்டம்

கேஜிஎஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், மூன்றாம் பாகத்திற்கான கதை தயாராகி விட்டதாக இயக்குனர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸை இயக்கியுள்ள, சலார் திரைப்படம் கிறிஸ்மஸையொட்டி வெளியாக உள்ள நிலையில், இது தொடர்பாக பிங்க்வில்லாவிற்கு அளித்த நேர்காணலில் இதை பதிவு செய்துள்ளார். "கேஜிஎப் 3 கண்டிப்பாக உருவாகும். நான் இயக்குவேன என எனக்கு தெரியாது. இருப்பினும், யாஷ் கண்டிப்பாக படத்தில் இருப்பார்" "இதை அறிவிக்க வேண்டும் என்பதற்காக நான் அறிவிக்கவில்லை. உறுதியாக சொல்கிறேன் கேஜிஎப் 3 உருவாகும். அதற்கான கதையும் தயாராகி விட்டது" என தெரிவித்தார்.

2nd card

ஜூனியர் என்டிஆர் உடன் இணையும் பிரசாந்த் நீல்

கேஜிஎஃப் 3 திரைப்படத்திற்கு முன் ஜூனியர் என்டிஆர் உடன் இணைவதை பிரசாந்த் நீல் உறுதி செய்துள்ளார். மேலும் அப்படம் தனது வழக்கமான படம் போல் அல்லாமல், வேறு விதமாக இயக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். "வித்தியாசமான உணர்வுகள் கொண்ட படமாக இது இருக்கும். நான் அந்த வகைக்குள் வர விரும்பவில்லை, ஆனால் எனக்கு தெரியும், இது ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என்று மக்கள் கருதுவார்கள்." எனக் கூறியுள்ளார். ஜூனியர் என்டிஆர்- பிரசாந்த் நீல் இணையும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்தாண்டு பிற்பகுதியில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் எல்லா இயக்குனர்களைப் போலவும் பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகரான அமிதாப்பச்சனை இயக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

கேஜிஎஃப் 3 உறுதி செய்த இயக்குனர்