Loading...
'ராக்கா' பட இசைப் பணிகள்: லண்டன் அபே ரோடு ஸ்டுடியோ அனுபவத்தைப் பகிர்ந்த அட்லீ
லண்டன் ஸ்டுடியோவில் ஜவான்' திரைப்பட இசை பணிகள் குறித்த அனுபவத்தை அட்லீ பகிர்ந்துள்ளார்.

'ராக்கா' பட இசைப் பணிகள்: லண்டன் அபே ரோடு ஸ்டுடியோ அனுபவத்தைப் பகிர்ந்த அட்லீ

எழுதியவர் Vasuki
Oct 05, 2026
06:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் தொடர் பிரம்மாண்ட வெற்றிகளைக் குவித்து, பாலிவுட்டில் 'ஜவான்' திரைப்படம் மூலம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்த முன்னணி இயக்குநர் அட்லீ, தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'ராக்கா' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற லண்டன் அபே ரோடு ஸ்டுடியோவில் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகளின் போது தங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவத்தை இயக்குநர் அட்லீ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

ஆர்ப்பரித்த கலைஞர்கள்

வெளியே காத்திருக்க வைத்த ஹாலிவுட் ஸ்டுடியோ

ஹான்ஸ் ஜிம்மர் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த ஹாலிவுட் கலைஞர்கள் பணியாற்றும் அங்கு, அட்லீயையும் சாய் அபயங்கரையும் யார் என்று தெரியாத காரணத்தால் முதலில் வெளியே அமர வைத்தனர்.

ஆரம்பத்தில் அங்கு அவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் பெரிய கவனமும் கிடைக்கவில்லை. ஆனால், சாய் அபயங்கரின் இசைக்கோர்ப்புப் பணிகள் முடிந்ததும் அங்கிருந்த ஒட்டுமொத்த ஹாலிவுட் கலைஞர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிப் பாராட்டினர்.

இந்த அபார இசைக்குச் சொந்தக்காரர் சாய் அபயங்கர் எனத் தெரிந்ததும் வியப்பில் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாடினர்.

சர்வதேச அளவில் இந்தியத் திறமைக்கு கிடைத்த இந்த மகத்தான அங்கீகாரம் மறக்க முடியாத தருணம் என அட்லீ நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT