LOADING...
ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' அன்கட் வெர்ஷன் ரிலீஸ்; ஆனால் இந்தியாவில் இல்லை
'துரந்தர்-2' இன்று Netflix தளத்தில் வெளியாகிறது

ரன்வீர் சிங்கின் 'துரந்தர் 2' அன்கட் வெர்ஷன் ரிலீஸ்; ஆனால் இந்தியாவில் இல்லை

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2026
07:40 am

செய்தி முன்னோட்டம்

ஆதித்யா தார் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்-2' திரைப்படத்தின் நீட்டிக்கப்பட்ட பதிப்பான 'Raw and Undekha' இன்று (மே 15) ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திரையரங்குகளில் வெளியானதை விட கூடுதல் காட்சிகளுடன் வெளியாகும் இந்தப் பதிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சற்றுமுன் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், "துரந்தர்: தி ரிவெஞ்ச் நாளை அமெரிக்காவில் வெளியாகிறது" என அறிவித்துள்ளது. அமெரிக்கா மட்டுமின்றி மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இருப்பினும், இந்தியாவில் உள்ள நெட்பிளிக்ஸ் பயனர்கள் இந்தப் படத்தை அங்கு பார்க்க முடியாது. இது இந்திய ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வெளியீடு

இந்தியாவில் எங்கே, எப்போது பார்க்கலாம்?

இந்திய ரசிகர்களுக்காக இந்தத் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகாமல், ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. தியேட்டர் பதிப்பை விட நீளமாக, சுமார் 3 மணிநேரம் 52 நிமிடங்கள் இந்தப் படம் ஓடும். திரையரங்குகளில் காட்டப்படாத பல "Raw" மற்றும் கூடுதல் காட்சிகள் இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன. என்று வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.

துரந்தர் 3

'துரந்தர் 3' உருவாகிறதா?

படத்தின் நாயகன் ஹம்சா/ஜஸ்கிரத் (ரன்வீர் சிங்) கதை முடிந்துவிட்டதா அல்லது மீண்டும் வருவாரா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து சமீபத்தில் ஜியோ ஸ்டுடியோஸின் ஜோதி தேஷ்பாண்டே கூறுகையில், "துரந்தர் இப்போதைக்கு முடிவுக்கு வரவில்லை, இந்த ஆண்டின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், துரந்தர் 3 அல்லது அதன் ஸ்பின்-ஆஃப் (Spin-off) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement