Page Loader
தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' டிரெய்லர் வெளியானது

தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' டிரெய்லர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2025
12:35 pm

செய்தி முன்னோட்டம்

தனுஷ், Gen Z ரசிகர்களை மையப்படுத்தி எடுத்த ஒரு 'வழக்கமான' காதல் கதை தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். ஒரு நவீன காதல் கதை, இளம் ஜோடிகளின் வாழ்க்கையை ஆராயும் இப்படம், எதிர்பாராத திருப்பங்களுடன் அவர்களின் உறவுகளைப் பின்னிப்பிணைக்கிறது. தனுஷ் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

NEEK படத்தின் விவரங்கள்

இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். இது பா பாண்டி, ராயன் படங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் மூன்றாவது படமாகும். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோவும், படத்தொகுப்புப் பணிகளை பிரசன்னா ஜி.கே.வும் கையாளுகின்றனர். ஜாக்கி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை வண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் கஸ்தூரி ராஜா மற்றும் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர்.