Loading...
தனுஷின் 'D56' திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் வடிவேலு: மதுரையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
தனுஷின் 'D56' திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் வடிவேலு

தனுஷின் 'D56' திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் வடிவேலு: மதுரையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
11:05 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, அடுத்ததாக தனுஷ் நடிக்கும் 'D56' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தின் தொடக்க விழா பூஜை மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. 'லப்பர் பந்து' படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஸ்டார், இதயம் முரளி படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரீத்தி முகுந்தன் இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், 'உறியடி' விஜயகுமார் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அண்மைக்காலமாக இசைத்துறையில் பட்டையை கிளப்பி வரும் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா

"தனுஷின் நடிப்புக்கும் அவரது திரைப்படங்களுக்கும் மக்களிடம் எப்போதும் தனி வரவேற்பு உண்டு"

சமீபத்தில் கார்த்தியுடன் 'சர்தார் 2' படத்தில் நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யா, தனுஷ் உடனான தனது புதிய கூட்டணி குறித்துச் செய்தியாளர்களிடம் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.

"இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து ஒரு சிறந்த கதையோடு வந்திருக்கிறார். தனுஷின் நடிப்புக்கும் அவரது திரைப்படங்களுக்கும் மக்களிடம் எப்போதும் தனி வரவேற்பு உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

தனுஷ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் 'வைகைப்புயல்' வடிவேலுவும் இணையவுள்ளது இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

கில்லர்

மீண்டும் இயக்கம்: எஸ்.ஜே.சூர்யாவின் 'கில்லர்'

நடிப்பில் கலக்கி வரும் எஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'கில்லர்' படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் த்ரில்லர் திரைப்படம் பான்-இந்திய அளவிலான பிரம்மாண்டமான படைப்பாகத் தயாராகி வருகிறது.

ADVERTISEMENT