டாடா பட நாயகி அபர்ணா தாசுக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகருக்கும் திருமணம்
செய்தி முன்னோட்டம்
'பீஸ்ட்' படத்தில் இரண்டாம் நாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அபர்ணா தாஸ்.
அவரும், 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என்கிற மலையாள படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடேயே அறிமுகமான நடிகர் தீபக் பரம்போல்-உம் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி, வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி, கேரளாவின் வடக்கஞ்சேரியில் திருமணம் நடைபெறவுள்ளது.
இவர்கள் இருவரும் மனோகரம் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
எனினும் இருவரும் தங்கள் சினிமா தொழிலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த காதல் குறித்து ரகசியம் காத்ததாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை அபர்ணா தாஸ் காதலிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர்
#AparnaDas actress of #Beast, #DaDa fame is getting married to actor #DeepakParambol of #ManjummelBoys #KannurSquad on April 24 th in #Vadakkancherry in #Kerala. pic.twitter.com/V9by3j9YFw
— Sreedhar Pillai (@sri50) April 3, 2024