தனுஷ்- ராஜ்குமார் பெரியசாமி இணையும் படம் இன்று பூஜையுடன் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்', ஏற்கனவே ₹186 கோடி வசூல் செய்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்த பெரிய திட்டத்திற்கு தயாராகி விட்டார்.
இந்த முறை அவர் இணையவிருப்பது, தமிழ் சினிமாவின் பல்துறை நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷுடன்.
ஆம், தனுஷின் இயக்கத்தில் உருவாகி வரும் இட்லி கடை படத்தினை அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி உடன் நடிக்கவுள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதையால் ஈர்க்கபட்டதாகவும், அந்த படத்தினை கோபுரம் ஃபிலிம்ஸ் பேனரின் கீழ் ஜி.என். அன்பு செழியன் தயாரிக்கிறது. இது தனுஷின் 55வது படமாகும்.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
அந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குனர் வெற்றிமாறனுக்கு கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#CinemaUpdate | தனுஷுடன் இணையும் ராஜ்குமார் பெரியசாமி!#SunNews | #D55 | #Dhanush | @dhanushkraja | @Rajkumar_KP pic.twitter.com/8aoLkPLL0E
— Sun News (@sunnewstamil) November 8, 2024