
மோகன்லாலின் புதிய படத்திற்கு இசையமைக்கிறார் லிடியன் நாதஸ்வரம்; வெளியான வீடியோ
செய்தி முன்னோட்டம்
18 வயதான லிடியன் நாதஸ்வரம், மோகன்லால் இயக்குனராக அறிமுகம் ஆகும், 'பரோஸ்' என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
அவர் மாசிடோனியாவில் தனது முதல் ஆர்கெஸ்ட்ரா பகுதியை பதிவு செய்துவரும் வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் வெளியானது.
அவர் தனது ரெக்கார்டிங் அமர்விலிருந்து ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் (முன்னர் ட்விட்டர் என அறியப்பட்டது) பகிர்ந்துள்ளார்.
மோகன்லால் இயக்கி நடிக்கும், 'பரோஸ்' ஒரு ஃபாண்டஸி திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இத்திரைப்படம், மார்ச் 2024 இல் திரையரங்குகளில் வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பியானோ கலைஞர் லிடியன் நாதஸ்வரம் அமெரிக்க ரியாலிட்டி ஷோவான 'The World's Best'-இல் பங்குபெற்று, 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்றதனால், தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம்
With love and respect to all music lovers, composers and great musicians around the world… My first orchestral recording for my debut movie #barroz directed by Shri. @mohanlal sir!
— Lydian Nadhaswaram Official (@lydian_official) February 1, 2024
It was an honour and an absolute pleasure to come all the way to Skopje, Macedonia and to… pic.twitter.com/dm4U7JWVVA