
GOAT படப்பிடிப்பு தளத்தில் ஸ்கேட்டிங் ஸ்கூட்டர்-ஐ ஒய்யாரமாக ஓட்டும் தளபதி விஜய்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயுடன் இணைந்துள்ள திரைப்படம் தான் GOAT- "The Greatest of All Time".
இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ரஷ்யா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிவடைந்து விடும். அதோடு படத்திற்கான அப்டேட்டும் தொடர்ச்சியாக வெளியாகும்.
அனால் GOAT -ஐ பொறுத்தவரை படம் குறித்த அப்டேட் எதவும் படக்குழுவினர் வெளியிடவே இல்லை.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான ஐஸ்வர்யா கல்பாத்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நடிகர் விஜய் கோட்சூட் அணிந்துகொண்டு, ஒய்யாரமாக ஸ்கேட் ஸ்கூட்டர் ஓட்டுகிறார்.
ரஷ்யாவில் கடுங்குளிரில் படக்குழுவினர் தற்போது விறுவிறுப்பாக படத்தை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
embed
ஸ்கேட்டிங் ஸ்கூட்டர்-ஐ ஒய்யாரமாக ஓட்டும் தளபதி விஜய்
#ThalapathyVijay Fun Time During #TheGreastestOfAllTime Shoot At Russia❤️🔥🫶🏾pic.twitter.com/JiLEDN7ofd— Saloon Kada Shanmugam (@saloon_kada) April 9, 2024