LOADING...
மெட்ரோவில் பயணித்த ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன்- புகைப்படங்கள் வைரல்
மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்த போது தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

மெட்ரோவில் பயணித்த ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன்- புகைப்படங்கள் வைரல்

எழுதியவர் Srinath r
Oct 13, 2023
04:10 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது வேலைக்காக மும்பை மெட்ரோ ரயிலில் பயணித்து, தனது ரசிகர்கள் மற்றும் சக பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்போது வைரலாகி வரும், அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இந்த வீடியோவில், அவர் மெட்ரோவில் பயணிப்பது போன்ற காட்சிகளும், தனது ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர், "நான் இன்றைக்கு வேலைக்கு செல்ல, மெட்ரோ ரயிலில் பயணிக்கிறேன்." "மிகவும் அன்பான மற்றும் இனிமையான சில மனிதர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் காட்டிய அன்பை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்." "இந்த அனுபவம் மிகவும் பிரமாதமாக இருந்தது. நான் போக்குவரத்து நெரிசல் மற்றும் வெப்பத்திலிருந்து தப்பித்தேன்" என பதிவிட்டுருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

மெட்ரோவில் பயணித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஹிரித்திக் ரோஷன்