இந்திய குடியுரிமை பெற்றதை அறிவித்த 2 .0 நடிகர் அக்ஷய் குமார்
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அக்ஷய் குமார். 'கில்லாடி' ஸ்டார் என அழைக்கப்படுபவர். தமிழில், ஷங்கர் இயக்கத்தில் உருவான, 2.0 திரைப்படத்தில், ரஜினிகாந்திற்கு வில்லனாக, 'பக்ஷிராஜன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்திய சினிமாவில் இவர் கொடிகட்டி பறந்தாலும், இவரை 'கனடியன்' குமார் என பட்டப்பெயர் வைத்து அழைப்பதுண்டு. அதற்கு காரணம், இவர் கனடாவில் பிறந்தவர். அதுமட்டுமின்றி, இதுநாள் வரை, கனடா நாட்டின் பிரஜையாக, அந்நாட்டின் குடியுரிமையை வைத்திருந்தார். இந்நிலையில், இந்தியா தனது 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்த நேரத்தில், தான், இந்திய குடியுரிமையை பெற்றுவிட்டதாக அவர் அறிவித்துள்ளார். அதோடு, 'மனதாலும், குடியுரிமையினாலும் இரண்டுமே ஹிந்துஸ்தானி. சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்' என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.