
'ராக்ஸ்டார்' அனிருத் பிறந்தநாள்: அவர் திரையில் தோன்றி பாடிய பாடல்கள்
செய்தி முன்னோட்டம்
தற்போதைய இளம்தலைமுறை இசையமைப்பாளர்களில், 'ராக்ஸ்டார்' என அழைக்கப்படுவது அனிருத் ரவிச்சந்தர்.
இளம் வயதிலே இசைத்துறையில் பல ஹிட் பாடல்களையும், சாதனைகளையும் புரிந்த அனிருத், இசையமைப்பது, பாடுவது மட்டுமின்றி, ஒரு சில பாடல்களில் நடனமாடியுமுள்ளார், திரையில் தோன்றியுமுள்ளார்.
தொடக்கத்தில் ப்ரோமோஷனுக்காக 'why this kolaveri' பாடலில் தோன்றியிருந்தார். அதன் பின்னர், அவர் திரையில் தோன்றினாலே பாடல் வெற்றிதான் என்றாகிவிட்டது.
குறிப்பாக, இயக்குனர் நெல்சன் உடன் அவர் செய்த ப்ரோமோ-விற்கு ப்ரோமோ வீடியோக்கள் வைரலானது.
அதேபோல, நடிகர்களுடன் இணைந்து ஒரு சில பாடல்களில் அவர் நடமாடியுமுள்ளார்.
அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்
card 2
வெள்ளித்திரையில் ராக்ஸ்டார் அனிருத்
சென்னை சிட்டி கேங்ஸ்டெர்: 'வணக்கம் சென்னை' படத்தில், ஹிப்ஹாப் தமிழா உடன் நடனமாடியிருந்தார்.
மாரி: மாரி படத்தில், 'மாரி' என்ற பாடலுக்கு அவரும், தனுஷும் இணைந்து பாடியது மட்டுமின்றி, ஒரு காட்சியில் நடித்துமிருந்தார்
மான் கராத்தே: இந்த படத்தில், அவரது நண்பர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
ஜாலி-ஓ-ஜிம்கானா: பீஸ்ட் படத்தில், இந்த பாடலில் 'தளபதி' விஜய் உடன் இணைந்து ஆடியிருந்தார்.
வாத்தி கமிங்: 'மாஸ்டர்' படத்தின் முதல் பாடலுக்கு இவர் நடமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவை மட்டுமின்றி, கோலமாவு கோகிலா, ரெமோ, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என பல படங்களுக்கு ப்ரோமோ வீடியோக்களும் செய்துள்ளார்.