NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது
    ஊகித்ததற்கு மாறாக, மும்பையிலேயே திருமணம் நடைபெறவுள்ளது

    ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    03:38 pm

    செய்தி முன்னோட்டம்

    ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்ய உள்ளார்.

    மணி கண்ட்ரோல் வெளியிட்ட செய்திப்படி, "சேவ் தி டேட்" என தலைப்பிடப்பட்ட அழைப்பிதழில், இவர்களின் ஆடம்பர திருமணம் BKC இல் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

    பல சர்வதேச இடங்களை நெட்டிஸின்கள் ஊகித்ததற்கு மாறாக, மும்பையிலேயே திருமணம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனந்த், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் இயக்குநராக பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். இதற்கிடையில், ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர், மேலும் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.

    அட்டவணை

    மூன்று நாள் திருமண கொண்டாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது 

    ஆனந்த்- ராதிகா திருமணம் ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    'ஷுப் விவா' என்று அழைக்கப்படும் முக்கிய திருமண விழா, வெள்ளிக்கிழமை, ஜூலை 12 அன்று தொடங்கும் எனவும், விருந்தினர்கள் இந்திய பாரம்பரிய உடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அடுத்த நாள் 'தெய்வீக ஆசீர்வாத விழா' நடைபெறுகிறது.

    மறுநாள், ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமை கொண்டாட்டங்களின் இறுதி நாளான திருமண வரவேற்பு நடைபெறும்.

    இந்நிலையில் இத்தாலியில் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டங்களும் தொடங்கி விட்டது. இதில், ஷாருக்கான், தோனி மற்றும் சல்மான் கான் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

    முன்னதாக மார்ச் மாதம், ஜாம்நகரிலும் இதேபோல ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருமணம்
    மும்பை
    ரிலையன்ஸ்
    முகேஷ் அம்பானி

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    திருமணம்

    2023 தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள் - ஓர் பார்வை தீபாவளி
    விஜய் வர்மாவை விரைவில் திருமணம் செய்யவுள்ள தமன்னா பாட்டியா? நடிகர்
    இன்று திருமணம்: வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் சினிமா
    மகளை மர்ம கும்பல் கடத்தியதாக புகாரளித்த தாய் - அம்பலமான உண்மை  காவல்துறை

    மும்பை

    இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த் ரஜினிகாந்த்
    க்ரைம் ஸ்டோரி: 19 வயது மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த இருவர் கைது  க்ரைம் ஸ்டோரி
    மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம் கொலை
    சென்னையில் தொடங்கியது 'தலைவர்170' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ரஜினிகாந்த்

    ரிலையன்ஸ்

    CampaCola-வை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ரிலையன்ஸ்! தொழில்நுட்பம்
    1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்! வணிகம்
    அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர் இந்தியா
    'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு வணிகம்

    முகேஷ் அம்பானி

    சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் ரிலையன்ஸ்
    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி வணிகம்
    ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த ஆலோசனை நிறுவனம் ரிலையன்ஸ்
    '20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் ரிலையன்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025