யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நடிகர் ரஜினிகாந்த்தை கட்டிப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நேற்று உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு நடிகர் ரஜினிகாந்த் வணங்கினார்.
இந்நிலையில், இன்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நடிகர் ரஜினிகாந்துடன் இருப்பது போன்ற புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் வெள்ளிக்கிழமை இரவு உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவுக்கு சென்றார்.
நேற்று அவர் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்த்தார்.
டுக்கேஜ்க
யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கிய ரஜினி
அதன்பிறகு, ரஜினியின் நடிப்புத் திறமையைப் பாராட்டிய உ.பி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, "எனக்கும் 'ஜெயிலர்'படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிகாந்தின் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு திறமையான நடிகர். படத்தில் ஒரு கதையும் இல்லை என்றாலும், அவரது நடிப்பால், அவர் அந்த படங்களை உயர்த்துகிறார்." என்று தெரிவித்தார்.
அதனையடுத்து, உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் காலை தொட்டு வணங்கினார்.
இந்நிலையில், அவர் தற்போது சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்வையும் சந்தித்துள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் இன்று அயோத்தி சென்று ராமர் கோவிலில் வழிபடுவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.