Page Loader
துபாய் கார் ரேசிங்கில் வெற்றிவாகை சூடிய அஜித்! குவியும் பாராட்டுகள்: வைரலாகும் வீடியோக்கள்
துபாய் கார் ரேசிங்கில் வெற்றிவாகை சூடிய அஜித்!

துபாய் கார் ரேசிங்கில் வெற்றிவாகை சூடிய அஜித்! குவியும் பாராட்டுகள்: வைரலாகும் வீடியோக்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 13, 2025
08:24 am

செய்தி முன்னோட்டம்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸின் ஒரு பகுதியான 911 ஜிடி3 ஆர் பிரிவில், அஜித் குமாரின் ரேஸிங் (AjithkumarRacing) அணி 3வது இடத்தை பிடித்துள்ளது. மொத்த ரேஸில், அஜித் குமாரின் அணி 23வது இடத்தை பிடித்தது. இந்த போட்டியை காண அஜித்குமாரின் ரசிகர்கள் பலர் அந்த அரங்கத்தில் குவிந்திருந்தனர். இது குறித்து போட்டி துவங்கும் முன்னர் பேசிய அஜித், ரசிகர்களின் அன்பு தன்னை மிகவும் நெகிழ்ச்சியுற செய்கிறது என்று கூறினார். 'அஜித்' 'AK' 'அஜித் சார்' என்று அரங்கம் அதிர கோஷங்களுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அஜித் குமாரை காண ரசிகர்கள் குவிந்ததை பார்த்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வியந்தனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

போட்டி விவரங்கள்

24H சீரிஸ் ரேஸ் என்பது, 24 மணி நேரம் தொடர்ந்து கார் ஓட்டும் போட்டியாகும். இந்த ரேஸில் 3 முதல் 4 ஓட்டுநர்கள் உள்ள ஒரு அணியில், ஒவ்வொருவரும் 6 மணி நேரம் ஓட்ட வேண்டும். ரேஸ் தொடங்குவதற்கு முன், Porsche GT4 போட்டியில் மட்டுமே அஜித் குமார் ஓட்டுநராக பங்கேற்கிறார் என அறிவிக்கப்பட்டது. Porsche 911 GT3 Cup (992) போட்டியின் இறுதியில், அஜித் குமாரின் அணி சிறப்பாக செயல்பட்டு, 3வது இடத்தை பெற்றது. மொத்தமாக 568 லேப்கள் ஓட்டப்பட்டு, 24 மணி நேரத்தில் 26 முறை கார் இடை நிறுத்தப்பட்டது. இந்த போட்டியில் போட்டியாளராக மட்டுமின்றி, அணியின் உரிமையாளராகவும் அஜித் பங்கேற்றார்.

பாராட்டுகள்

அஜித்குமாருக்கு இணையத்தில் குவியும் பாராட்டுகள்

போட்டி இறுதியில் அஜித் கையில் தேசிய கொடியுடன் அரங்கத்திற்குள் ஓடி வந்தது காண்போரை சிலிர்க்க வைத்தது. போட்டியை நேரில் காண, அஜித் ரசிகர்கள் தவிர, அஜித்தின் குடும்பத்தினர்- நடிகை ஷாலினி மற்றும் குழந்தைகள் அனுஷ்கா, ஆத்விக் மற்றும் நடிகர் மாதவனும் வந்திருந்தார். இந்த வீடியோக்களும் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு இணையத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சினிமா தாண்டி தனது தனிப்பட்ட விருப்பத்தை நோக்கி பயணித்தது மட்டுமின்றி அதில் வெற்றியும் அடைந்துள்ளார் என அவரின் சக நடிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post