அஜித் ரசிகர்களே..குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கடும் மன வருத்தத்தில் இருந்த அஜித்தின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக மற்றொரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
அதன்படி 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீடும் பொங்கல் வெளியீட்டாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், 'விடாமுயற்சி' படத்தின் வெளியீடு இருந்ததால், அதனை தவிர்த்து 'குட் பேட் அக்லி' படத்தின் பணிகள் தாமதமாகின.
தற்போது 'விடாமுயற்சி' எப்போது வெளியானாலும், 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ஆம் தேதியில் வெளியிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
embed
Twitter Post
#CinemaBytes | ரசிகர்களுக்கு Surprise கொடுத்த 'Good Bad Ugly' படக்குழு!#SunNews | #GoodBadUgly | #AjithKumar | @Adhikravi pic.twitter.com/nSQD4GXV7H— Sun News (@sunnewstamil) January 6, 2025
விடாமுயற்சி
பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய விடாமுயற்சி
'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் பண்டிகைக்காக வெளியிட திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
எனினும் எதற்காக இந்த ஒத்திவைப்பு என்ற காரணமோ, மாற்று வெளியீட்டு தேதியையோ இன்னும் அறிவிக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக தற்போது 10 படங்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருப்பதாக அறிவித்துள்ளது.
மதகஜராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை என பல படங்கள் திரையை ஆக்கிரமிக்க உள்ளன.
இந்த நிலையில் கிட்டதட்ட 2 வருடங்களாக அஜித்தின் படம் எதுவும் வெளியாகாத நிலையில், தயார் நிலையில் உள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களும் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி ஜனவரி இறுதியில் வெளியிடப்படலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.