
நீண்ட காத்திருப்புக் பின் வெளியானது அதிர்ஷ்டஷாலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் நடிக்கும் அதிர்ஷ்டஷாலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது.
இயக்குனர் மித்ரன் ஜவகருடன் மாதவன் முதல்முறையாக இணைந்துள்ள திரைப்படம் அதிர்ஷ்டசாலி என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். அதிர்ஷ்டசாலியில் ஷர்மிளா மாண்ட்ரே, ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டியன், சாய் தன்ஷிகா மற்றும் ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்தின் சினிமாட்டோகிராபியை அரவிந்த் கமலநாதன் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஆகியோர் மேற்கொள்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
எனினும், இந்த படத்தின் கதை மற்றும் இதர விபரங்கள் தொடர்ந்து ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது ஐங்கரன் இன்டர்நேஷனல்
Unveiling the first look of #Adhirshtasaali,Directed by @MithranRJawahar starring @ActorMadhavan
— Ayngaran International (@Ayngaran_offl) November 3, 2024
#AdhirshtasaaliFirstLook 🤞🏻🎯@MadonnaSebast14 @SaiDhanshika @realradikaa @thisisysr @UpasanaRC @karthikmuthu14 @thiyaguedit @KlcPRJayaraman @nsreedharnaidu #AAMedia pic.twitter.com/pFPZTuPdSb