NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
    சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்து, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

    எழுதியவர் Srinath r
    Nov 29, 2023
    12:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் விஸ்வரூபமாக வெடித்த இயக்குனர் அமீர் சர்ச்சை தொடர்பாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அவருக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், "பருத்திவீரன் பிரச்சனை 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது."

    "நான் இது நாள் வரை அதைப்பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே நான் அமீர் அண்ணா என்று தான் அவரை குறிப்பிடுவேன்."

    "ஆரம்பத்தில் இருந்தே அவர் குடும்பத்துடன் நெருங்கி பழகியவன். அவர் சமீபத்திய பேட்டிகளில், என் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது."

    2nd ard

    "சினிமா துறையில் பணியாற்றும் அனைவரையும் மதிப்பவன் நான்" - ஞானவேல் ராஜா

    "அதற்கு பதில் அளிக்கும் வகையில் நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால், அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்."

    "என்னை வாழவைக்கும் சினிமா துறையையும், அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என ஞானவேல் ராஜா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஞானவேல் ராஜா தயாரிப்பில் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் வெளியாகும் முன்பே, அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இடையே திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து பிரச்சனை வெடித்ததாக கூறப்படுகிறது.

    இவர்கள் பிரச்சனையை பல்வேறு சினிமா சங்கங்கள் தலையிட்டு தீர்க்க முடியாததால், விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

    3rd card

    அமீர்-ஞானவேல் ராஜா பிரச்சனையில் இதுவரை நடந்தவை

    இந்த படம் தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அமீர், இத்திரைப்படத்தால் தனக்கு ₹2 கோடி நஷ்டம் என தெரிவித்தார்.

    இதற்கு மற்றொரு நேர்காணல் வழியாக பதில் அளித்த ஞானவேல் ராஜா, அமீரை "வேலை தெரியாதவர்" என்றும், "திருடன்" என்றும் விமர்சித்திருந்தார்,

    ஞானவேல் ராஜாவின் விமர்சனத்திற்கு சினிமா துறையில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், பல்வேறு நடிகர்கள் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    நடிகர்கள் பொன்வண்ணன், சசிகுமார், இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோர், ஞானவேல் ராஜாவிற்கு எதிராக தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

    இதன் தொடர்ச்சியாகவே, தற்போது ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தார் ஞானவேல் ராஜா

    .@GnanavelrajaKe sir issues a statement of clarification.#Paruthiveeran pic.twitter.com/7LVzmtU77B

    — Studio Green (@StudioGreen2) November 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமீர்
    தயாரிப்பாளர்
    ஸ்டுடியோ கிரீன்
    ட்விட்டர்

    சமீபத்திய

    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்

    அமீர்

    வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல் வெற்றிமாறன்
    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா  இயக்குனர்

    தயாரிப்பாளர்

    சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை கோலிவுட்
    நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு  நடிகர் அஜித்
    பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு கோலிவுட்
    அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம் இயக்குனர்

    ஸ்டுடியோ கிரீன்

    வெளியானது கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ - நலமா? நடிகர் சூர்யா

    ட்விட்டர்

    கனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கனடா
    மகளின் பிரிவை தாங்க முடியாத விஜய் ஆண்டனி மனைவியின் உருக்கமான பதிவு விஜய் ஆண்டனி
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025