Page Loader
இந்தியா - பாக்.,மேட்சில், ஐபோனை பறிகொடுத்த லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி 
லெஜெண்ட் சரவணன் மற்றும் ராய் லட்சுமியுடன் ஊர்வசி

இந்தியா - பாக்.,மேட்சில், ஐபோனை பறிகொடுத்த லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 16, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி, கோலிவுட்ல் 'லெஜெண்ட்' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். இவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறார். இவர் கடந்த ஞாயிற்றுகிழமை, அகமதாபாத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் போட்டியை காண சென்றுள்ளார். இந்த போட்டியின் போது, அந்த அரங்கம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. ஒரே கொண்டாட்டமாக அமர்க்களமாக சென்ற அந்த போட்டியில், ஊர்வசி, தனது 24-கேரட் கோல்டு ஐபோனை தவறவிட்டுள்ளார். இது குறித்து அவர் உடனடியாக காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகார் பதிவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள், ரிஷப் பந்த் அவரது இதயத்தை கொள்ளையடித்தது மட்டுமின்றி, மொபைலையும் எடுத்திருப்பாரோ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

ஐபோனை பறிகொடுத்த நடிகை ஊர்வசி