
"சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதன் மூலம் ரஜினிகாந்த் ஜீரோ ஆகிவிட்டார்": ரோஜா செல்வமணி காட்டம்
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில், ஆந்திராவின் பழம்பெரும் நடிகரும், மறைந்த முன்னாள் முதல்வர் NTR -இந்த நூறாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
அப்போது, NTR-இன் மருமகனும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பற்றி புகழ்ந்து பேசி இருந்தார்.
இது குறித்து, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியின் மந்திரியும், நடிகையுமான ரோஜா செல்வமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
"ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்க முடிவு செய்ததும், அரசியல் பேசக்கூடாது.என்.டி.ஆரும் நம்மைப் போன்ற கலைஞர்தான்.அவர் கடவுளாக பார்க்கப்பட்டார். அதனால் அவர் எப்படி கொல்லப்பட்டார், எப்படி அவரது கட்சி பறிக்கப்பட்டது என்பது ரஜினிகாந்துக்குத் தெரியும்" என்றார்.
தொடர்ந்து, "ரஜினிகாந்தை பெரிய அளவில் கற்பனை செய்து கொண்டிருந்தோம், ஆனால் தற்போது அவர் பூஜ்ஜியமாகி விட்டார்," என்றும் கடுமையாக சாடியுள்ளார் ரோஜா.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினிகாந்தை காட்டமாக சாடிய ரோஜா
#Roja Latest Speech about #Rajinikanth #SuperstarRajinikanth #YSRCPApologizeRAJINI #Thalaivar pic.twitter.com/DeK2K44o8V
— Filmic Reels (@filmic_reels) April 30, 2023