அழகிய கோவா கடற்கரையில், காதலனை கரம்பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது காதலர் ஜாக்கி பாக்னானியை நேற்று திருமணம் செய்துகொண்டார். கோவாவில் நடந்த இந்த திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தயாரிப்பாளரும், பாலிவுட் நடிகருமான ஜாக்கி பக்னானியை கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்துவந்தார். இந்நிலையில், இவர்களின் திருமணத்தை அழகிய பீச் வெட்டிங்காக நடத்த வேண்டும் என இருவரும் முடிவு செய்து, கோவா கடற்கரையை தேர்வு செய்தனர். நேற்று மாலை 3:30 மணியளவில் கோவாவில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில், பசுமை திருமணமாக, இந்த திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண விழாவில், ஷில்பா ஷெட்டி, ஈஷா தியோல் என பலரும் கலந்து கொண்டனர்.