Page Loader
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதலித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதலித்த கிரிக்கெட் வீரர்!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி காதலித்த கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

எழுதியவர் Venkatalakshmi V
May 11, 2023
08:46 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் தற்போது பிரபலமாகி வரும் இளம் நடிகைகளில் ஐஸ்வர்யா லக்ஷ்மியும் ஒருவர். விஷாலின் 'ஆக்க்ஷன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன் பின்னர் தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டார். இருப்பினும் அவரை இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகையாக மாற்றியது தற்போது வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படமே. மணிரத்னம் இயக்கி இருந்த அந்த சரித்திர படத்தில், 'பூங்குழலி' என்ற ஓடக்காரப்பெண் கதாபாத்திரைத்தை அழகாக சித்தரித்திருந்தார். இவரின் பூர்வீகம் கேரளாவாகும். மலையாள திரையுலகில் தான் முதலில் காலடி எடுத்துவைத்தார். தமிழில் நடித்து வந்தாலும், மலையாள படவுலகில் இவர் முன்னணி நடிகையாவார்.

card 2

கிரிக்கெட் வீரரை மனதிற்குள் காதலித்த ஐஸ்வர்யா 

சமீபத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, தன்னுடைய பர்சனல் விஷயங்களை ஒரு ஊடக பேட்டியில் தெரிவித்திருந்தார். ஐஸ்வர்யா லட்சுமி பிறந்ததும், அவர் தந்தை அவருக்கு 'ஸ்ரீ லட்சுமி' என பெயர் சூட்டினாராம். தாய் இவருக்கு 'ஐஸ்வர்யா' என பெயர் சூட்டினாராம். அதனால் தன்னுடைய பெயர் 'ஐஸ்வர்யா லட்சுமி' என மாறியதாக கூறினார். சிறு வயது முதல் நிறைய திரைப்படங்கள் பார்ப்பாராம். தமிழில் விஜய் படங்கள் ரொம்ப இஷ்டமாம். ஹிந்தியில் பிடித்த நடிகர் அபிஷேக் பச்சன் எனக்கூறினார். அதோடு, பள்ளி படிக்கும் போது, 3-வது படிக்கும் போதிலிருந்து, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்க்-ஐ மிகவும் பிடிக்குமாம். +2 முடிக்கும் வரை அவரை மனதிற்குள் ஒருதலையாக காதலித்ததாக அந்த பேட்டியில் கூறியுள்ளார்.