தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு
செய்தி முன்னோட்டம்
கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது போல, தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளது.
ஜூலை மாதம் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத காரணத்திற்காக, 14 நடிகர்-நடிகையர் மீது, தென்னிந்திய நடிகர் சங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், புகார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
அதன்பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு எட்டப்பட்டதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில், மேலே குறிப்பிட்ட நான்கு நடிகர்கள் மீது ரெட் கார்டு நோட்டீஸ் தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
card 2
தயாரிப்பாளர் சங்க பணத்தின் வரவு செலவு கணக்கால், விஷாலுக்கு ரெட் கார்டு
நடிகர் சிம்புவிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவடையாத மைக்கேல் ராயப்பன் பிரச்சனையை மேற்கோள்காட்டி, அவருக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்த போது முறையாக கணக்குவழக்குகளை பராமரிக்காத காரணத்திற்காக விஷாலுக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடிப்பதால், அவருக்கும் ரெட் கார்டு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் முறையாக பதில் அளிக்காமல் நழுவுவதால் அதர்வா முரளிக்கு ரெட் கார்டு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.