NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம் 
    சிம்பு, தனுஷ், SJ சூர்யா உள்ளிட்ட 14 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 03, 2023
    04:55 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட்டில், தனுஷ், S.J.சூர்யா, அமலா பால் முதற்கொண்டு 14 நடிகர்-நடிகையர் மீது, தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காததாக கூறி, தென்னிந்திய நடிகர் சங்கத்திடம், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், புகார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

    இதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு ரெட்-கார்டு வழங்க போவதாகவும் கூறப்பட்டது.

    இதனிடையே, தென்னிந்திய நடிகர் சங்கம், தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில், "தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நிலவி வருகிறது. நடிகர்கள் நலனை, உரிமைகளை பாதுகாப்பது போலவே தயாரிப்பாளர்கள் நலனை கருத்தில் கொண்டே தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக இரு சங்கங்கள் இடையே மோதல் என்ற ரீதியில் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மூலமாக செய்திகள் பரப்பப்படுகின்றன".

    card 2

    "பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்"

    "தமிழ் திரைத்துறையின் முக்கிய சங்கங்களான தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்குள் இடையே எந்த மோதலும் இல்லை".

    "நடிகர்களின் கால்ஷீட், புதிய ஒப்பந்தங்கள் குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து சில புகார்கள் வந்தன. அதேபோல் நடிகர்கள் தரப்பிலும் சில பிரச்சினைகளை கூறியுள்ளனர். இவை வழக்கமாக இரு தரப்பிலும் எழக்கூடிய, பேசினால் தீர்ந்து விடக் கூடிய பிரச்சினைகள்தான். ஆனால் ஒரு தரப்பு வாதங்களை மட்டுமே மையமாக வைத்து செய்திகள் பரவுவது வருத்தம் அளிக்கிறது".

    "இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பிரச்சினைகளும் விரைவில் களையப்படும். இதைவிடுத்து இரு சங்கங்களிடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் விதத்தில் வீண் வதந்திகளை பரப்புவோருக்கு எங்கள் கண்டனத்தை பதிவு செய்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    கட்டணம் தெரிவித்த நடிகர் சங்கம்

    தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் !
    சீர்குலைக்கும் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்!! #NadigarSangam #siaa@actornasser @VishalKOfficial @Karthi_Offl #poochiSmurugan #karunas @johnsoncinepro pic.twitter.com/pYE62N9cva

    — nadigarsangam pr news (@siaaprnews) July 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தனுஷ்
    கோலிவுட்
    நடிகர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தனுஷ்

    தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது பாடல் வெளியீடு
    தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட அறிவிப்பு
    தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ட்ரெண்டிங் வீடியோ: ஐந்து மில்லியன் வியூஸ்களை கடந்த 'தசரா' படத்தின் டீஸர் படத்தின் டீசர்

    கோலிவுட்

    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி முதல் அமைச்சர்
    "இதுவரைக்கும் அது போன்ற படங்கள் பண்ணல.. ": டக்கர் படம் குறித்து நடிகர் சித்தார்த் பெருமிதம்  தமிழ் திரைப்படம்
    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! இசையமைப்பாளர்
    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்

    நடிகர்

    லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்  நடிகர் விஜய்
    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி
    ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்? பதில் கூறிய நடிகர் சித்தார்த்!  வைரல் செய்தி
    நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து அவரே வெளியிட்ட புதுத்தகவல்;  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்  பிரபாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025