Loading...
சென்னையில் இருந்து கோவைக்கு முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணித்த விஜய் ஆண்டனி: அப்பா குட்டி பட புரமோஷன்
பட புரமோஷனுக்காக கோவை எக்ஸ்பிரஸ் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்தார் நடிகர் விஜய் ஆண்டனி.

சென்னையில் இருந்து கோவைக்கு முன்பதிவில்லா ரயில் பெட்டியில் பயணித்த விஜய் ஆண்டனி: அப்பா குட்டி பட புரமோஷன்

எழுதியவர் Vasuki
Nov 21, 2026
02:39 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள அப்பா குட்டி திரைப்படம் நேற்று (நவம்பர் 20) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், அப்படத்திற்காக நடிகர் விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ள எளிமையான மற்றும் வித்தியாசமான விளம்பர யுக்தி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில், சாமானியப் பயணிகளைப் போல முன்பதிவில்லாப் பெட்டியில் (Unreserved Compartment) பயணித்து அவர் சக பயணிகளுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். எவ்வித ஆடம்பரமும் இன்றி ரயில் இருக்கையில் அமர்ந்து பயணித்த விஜய் ஆண்டனியைக் கண்டதும் பயணிகள் உற்சாகமடைந்து அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

கவனம் ஈர்க்கும் விளம்பர உத்தி

பயணிகளுடன் உரையாடி அப்பா குட்டி படத்திற்கு ஆதரவு திரட்டிய விஜய் ஆண்டனி

பயணத்தின்போது பொதுமக்களிடம் இயல்பாகக் கலந்துரையாடிய விஜய் ஆண்டனி, நேற்று வெளியான தனது அப்பா குட்டி திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்துள்ள இப்படம், தந்தை - மகள் பாசத்தை மையமாகக் கொண்டு பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர் நடிப்பில் உருவாகியுள்ளது.

அப்பா குட்டி கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் சூழலில், படத்தை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்க விஜய் ஆண்டனி கையாண்டுள்ள இந்தப் புதிய அணுகுமுறை கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்களோடு மக்களாக ரயிலில் பயணித்து அவர் செய்த இந்தப் புரமோஷன் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT