கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார்
செய்தி முன்னோட்டம்
இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்(ஐஎஸ்பிஎல்) தொடரில் தமிழ்நாடு அணியை வாங்கியதன் மூலம், கிரிக்கெட்டில் நடிகர் சூர்யா கால் பதித்துள்ளார்.
ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் ஸ்டேடியம் கிரிக்கெட்க்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்குடனும், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் விளையாடுபவர்களின் திறமையை உலகிற்கு உணர்த்தும் நோக்கிலும்,
முதல்முறையாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை மும்பையில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடர், பத்து ஓவர் கொண்ட T10 போட்டிகளாக நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெறுகின்றன.
2nd
தொடரில் பங்கேற்கும் பிற அணிகள், அதன் உரிமையாளர்கள் யார்?
சென்னையை தவிர்த்து, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்) ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
மும்பை அணியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஹைதராபாத் அணியை நடிகர் ராம்சரண், பெங்களூர் அணியை ஹிரித்திக் ரோஷன், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமார் ஆகியோர் வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் இதில் சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கி உள்ளார்.
"ஐஎஸ்பிஎல் ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு கிரிக்கெட் வடிவத்தை முன்னணியில் கொண்டு வருவது மட்டுமல்லாமல், அதைவிட முக்கியமாக, இது அடிக்கடி கவனிக்கப்படாமல் போகும் அசாதாரண திறமைகளுக்கான கதவுகளை திறக்கிறது," என்று பிசிசிஐ பொருளாளரும், ஐஎஸ்பிஎல் மையக் குழு உறுப்பினருமான ஆஷிஷ் ஷெலர் கூறியுள்ளார்.