சர்வதேச திரைப்பட விருதை வென்ற சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா
நடிகர் சூர்யா-நடிகை ஜோதிகாவின் மகள் தியா தற்போது மும்பையில் படித்து வருகிறார். அவர் தனது பெற்றோரர்களை போலவே சினிமாவில் நுழைய தயாராகி வருகிறார் என தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான குறும்பட போட்டியில் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படத்தினை இயக்கியமைக்காகவும் விருதை வென்றுள்ளார். 'த்ரிலோகா' இன்டர்நேஷனல் பிலிம்ஃபேர் விருதுகள் நடத்திய போட்டியில்,'Leading Light' என்ற படத்தினை எழுதி, இயக்கியுள்ளார் தியா. திரைக்கு பின்னால் இருக்கும் பெண்களின் கதைகளை பேசும் படம் இது எனக்குறிப்பு சொல்கிறது. தியா வெற்றி பெற்றதை நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார். எது எப்படியோ, நடிகர் சிவகுமார் குடும்பத்தில் இருந்து மூன்றாம் தலைமுறையும் சினிமாவில் நுழையாக தயாராகி வருகிறதை சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.