
வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்
செய்தி முன்னோட்டம்
ஃபெங்கல் புயல் சென்னையை புரட்டி போடும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாரா வண்ணம் புயல் பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் கடும் மழை பெய்தது.
இதன் தொடர்ச்சியாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இன்றும் விழுப்புரம் மாவட்ட கிராமப்பகுதிகளில் வெள்ள நீர் விடியவில்லை.
இந்த சூழலில் மத்திய அரசிடம் வெள்ள நிவாரணம் தரக்கோரி முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறினார்.
எனினும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் தேசிய பேரிடர் நிதியில் தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஃபெஞ்சல் புயல் - கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சகோதரர் @Siva_Kartikeyan, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என்… pic.twitter.com/YIu9bMrFmH
— Udhay (@Udhaystalin) December 4, 2024
தொழில்
அமரன் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதன் தொடர்ச்சியாக இப்படம் இந்த வெள்ளிக்கிழமை, டிசம்பர் 6ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
அதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படம், சுதா கொங்கரா- சூர்யா இணைந்து நடிக்கவிருந்த 'புறநானூறு' படம் ஆகும். சில காரணங்களால் அப்படத்திலிருந்து சூர்யா விலக, தற்போது அந்த கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
சுவாரசியமாக அந்த படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.