
ஆர்த்தி - ரவி விவாகரத்து வழக்கில் அடுத்த ட்விஸ்ட்; கெனிஷா நீதிமன்றத்திற்கு வர தயாராக இருப்பதாக பதிவு
செய்தி முன்னோட்டம்
நடிகை ஆர்த்தி மற்றும் ரவி மோகன் விவாகரத்து வழக்கில் பாடகி கெனிஷா ஃப்ரான்சிஸ் தான் காரணம் என ஆர்த்தி ரவி பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து கெனிஷா மீது பலரும் அவதூறாக கருத்துகள் கூற, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு நெடிய பதிவை இட்டுள்ளார்.
அதில் தனது தரப்பு நியாயத்தைக்கூற "நான் நீதிமன்றத்திற்கு வர தயாராக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஆர்த்தி சமீபத்தில், "எங்கள் விவாகரத்திற்கு முன், எங்கள் வாழ்க்கையில் மூன்றாவது நபர் இருந்தார்" எனக் கூறியிருந்தார்.
இதனால் இணையத்தில் கெனிஷா மீதான விமர்சனங்கள் அதிகரித்தது மட்டுமின்றி, அவருக்கு கொலை மிரட்டலும் விடப்பட்டதாக கூறப்படுகிறது.
கெனிஷாவின் பதிவு
நெடிய பதிவில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய கெனிஷா
"நான் எனது கமெண்ட் செக்ஷனை நிறுத்தி வைக்க மாட்டேன். நான் எங்கேயும் யார் பின்னாலேயும் போய் ஒளிய மாட்டேன். என்னை கேள்வி கேட்பவர்கள் என் முகத்திற்கு நேராக கேள்வி கேளுங்கள் நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன். மேலும் எனது தரப்பு நியாயத்தை மக்களிடத்தில் சொல்ல எனக்கு அது சரியான வாய்ப்பாகவும் இருக்கும்" என தெரிவித்தார்.
"நீங்கள் சொல்வதைப் போல், என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களுக்கு நான் தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் நீதிமன்றத்திற்கு வரத் தயாராக இருக்கிறேன். என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதுதான் சரியானதாகவும் இருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
பரஸ்பரம் அவதூறு கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டுமென நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கு விசாரணையின் இறுதியில், இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதோடு, ஏற்கெனவே பொதுத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்களை நீக்க வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்தினார்.
நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.