நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்; இன்று காலை வீடு திரும்பினார்
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாள வீக்க (அன்யூரிஸம்) பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவருக்கு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது என மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது. அதனைத்தொடா்ந்து 2 நாட்கள் மருத்துவர்கள் கணிப்பில் வைக்கப்பட்டார் ரஜினிகாந்த். தற்போது அவரது வழக்கமான பணிகளை அவரே மேற்கொள்வதால், அவரை டிஸ்சார்ஜ் செய்து விட்டதாகவும், வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து ரஜினிகாந்த் தனது வீட்டுக்குத் திரும்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.