
#நிவின்பாலி'39- மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் பற்றி சுவாரசியமான 5 தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி இன்று தனது 39ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' திரைப்படம் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர், 'தட்டத்தின் மறையாத்து', ' பிரேமம்' திரைப்படங்கள் மூலம் மலையாள திரையுலகில் அறியப்படும் நபராக உயர்ந்தார்.
'ஆக்ஷன் ஹீரோ பிஜு', 'மூத்தோன்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்திற்கு சொந்தக்காரர் ஆனார்.
தேர்ந்தெடுக்கும் கதைக்கு இவர் கொடுக்கும் முக்கியத்துவமும், ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரங்களுக்கு இவர் அளிக்கும் அர்ப்பணிப்பும் இவரை மலையாள திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வைத்துள்ளது.
இன்று தன் 39ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிவின் பாலி பற்றி சுவாரசியமான ஐந்து தகவல்களை இங்கே பார்க்கலாம்.
2nd card
இன்ஜினியர் டு ஹீரோ
கேரளாவில் கொச்சினில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் 2006ஆம் ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றார் நிவின் பாலி.
கல்லூரியில் நடந்த கேம்பஸ் இன்டர்வியூரில் தேர்வாகி, ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக சிறிது காலம் பணியாற்றினார்.
பின்னர் தனது எதிர்காலம் சினிமாவில் தான் என அறிந்தவர், ஐடி வேலையை உதறித்தள்ளிவிட்டு நடிக்க வந்தார்.
3rd card
'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' ஆடிஷனில் தேர்வு செய்யப்படவில்லை
நிவின் பாலியின் முதல் திரைப்படமான 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' திரைப்படத்திற்கு ஆடிசன் சென்ற போது அதில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
படத்தின் இயக்குனரான வினீத் சீனிவாசன், படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது முதல் முறையை ஆடிஷன் சென்ற போது, நிவின் பாலி அதில் தேர்வாகவில்லை.
பின்னர் படத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர் அதிலிருந்து வெளியேறியதால், அந்த வாய்ப்பு மீண்டும் நிவின் பாலிக்கு கிடைத்தது.
4rd card
நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னன்
நிவின் பாலி ' பிரேமம்', 'ஓம் சாந்தி ஒஷானா' உள்ளிட்ட திரைப்படங்களில் காதல் மன்னனாக ஜொலித்தவரின் நிஜ வாழ்க்கையிலும் காதல் திருமணம் தான்.
கல்லூரியில் படிக்கும்போது உடன்படித்த ரின்னா என்ற பெண்ணுடன் காதல் மலர்ந்தது பின் அவரை திருமணம் செய்து கொண்டார்.
நிவின் பாலி, தன் சினிமா பயணத்திற்கு பெரும் உறுதுணையாக இருந்தது தன் மனைவி என அடிக்கடி கூறுவார். நிவின் பாலி- ரின்னா தம்பதிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
5th card
'பிரேமம்' படத்திற்கு இவர் முதல் சாய்ஸ் இல்லை
'ததட்டத்தின் மறையாத்து' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் நிவின் பாலியை மலையாள சினிமா அறிந்திருந்தாலும் இவரை தென்னிந்திய ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது நேரம் மற்றும் பிரேமம் திரைப்படங்கள் தான்.
பிரேமம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, தெலுங்கில் நாகசைதன்யா, சுருதிஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழிலும் ரீமேக் ஆவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்திற்கு நிவின் பாலி முதல் சாய்ஸ் இல்லை என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியிருந்தது ரசிகர்களை ஷாக் ஆகியது.
முதலில் 'ஜார்ஜ் டேவிட்' கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்ததாகவும், சந்தர்ப்பங்கள் அமையாததால் நிவின் பாலி அதில் நடித்ததாகவும் கூறியிருந்தார்.
6th card
நடிகர் டோவினோ தாமஸின் உறவினர்
'மின்னல் முரளி', இந்த வருடம் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் தேர்வாகியுள்ள '2018' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த டோவினோ தாமஸ்.
இவரும், நிவின் பாலியும் தூரத்து உறவினர்கள் என்பது ரசிகர்கள் பலரும் அறியாத புதிய தகவல்.
நிவின் பாலி தற்போது தமிழில் ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு, இயக்குனர் ராம் இயக்கத்தில் ' ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.