LOADING...
ஜாலியா இருந்த ஒருத்தன்: நடிகர் ஜீவாவின் புதிய திரைப்பட டீசர் வெளியீடு! சிஎம் விஜய் வசனம் ஹைலைட்
நடிகர் ஜீவாவின் புதிய திரைப்பட டீசர் வெளியீடு

ஜாலியா இருந்த ஒருத்தன்: நடிகர் ஜீவாவின் புதிய திரைப்பட டீசர் வெளியீடு! சிஎம் விஜய் வசனம் ஹைலைட்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
06:42 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று (ஜூன் 21) வெளியிடப்பட்டுள்ளது. நகைச்சுவை கலந்த வணிகத் திரைப்படமாக இது தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் புதிய டீசர் காட்சிகள் தற்பொழுது பல்வேறு இணையதளங்களில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகின்றன. ஜியோ (JIO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் திரைப்படம், நடிகர் ஜீவாவின் திரைப்பயணத்தில் 47வது திரைப்படமாக அமைந்து தற்போது ரிலீசுக்குத் தயாராகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Embed

வெற்றிக் கூட்டணி

16 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

இயக்குநர் எம்.ராஜேஷ் மற்றும் நடிகர் ஜீவா ஆகிய இருவரின் கூட்டணியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியான சிவா மனசுல சக்தி திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சுமார் 16 ஆண்டுகள் கழித்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதனால் இந்த புதிய படத்தின் மீது சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முந்தைய படத்தைப் போலவே இதுவும் ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக இருக்கும் எனத் தெரிகிறது.

Advertisement

முதல்வர் விஜய்

முதலமைச்சர் விஜய் குறித்த சுவாரசியமான வசனம்

இந்தத் திரைப்படத்தின் டீசரில் முதல்வர் விஜய் குறித்த ஒரு சுவாரசியமான வசனம் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. டீசர் காட்சியில் வரும் யூடியூப் பிரபலம் பரிதாபங்கள் சுதாகர், நடிகர் ஜீவாவிடம் ஒரு வசனத்தைக் கூறுகிறார். உன்னைப் போல் கல்யாணத்தை நிறுத்தப் போன ஒருவர்தான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் என்று அவர் பேசுகிறார். இதனுடன் விஜய் நடித்த யூத் திரைப்படக் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. மேலும் டீசரின் இறுதியில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிகர்கள்

படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் மற்றும் தயாரிப்பு விவரங்கள்

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக லவ் டுடே புகழ் நடிகை இவானா நடித்துள்ளார். இவர்களுடன் பரிதாபங்கள் சுதாகர், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், ராஜ்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இசை

தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் விபரம்

ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் ராஜேஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஏற்கனவே பல சிறந்த பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திரைப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் ஆசிஷ் ஜோசப் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement