
படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் சூரிய கிரண் காலமானார்
செய்தி முன்னோட்டம்
ரஜினிகாந்த் நடிப்பில் '80களில் வெளியான ஹிட் திரைப்படம் 'படிக்காதவன்'. இப்படத்தில், சிறு வயது ரஜினியாக நடித்து பிரபலமானவர் மாஸ்டர் சுரேஷ் (எ) நடிகர் சூரிய கிரண்.
அவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு, இன்று காலமானார்.அவருக்கு வயது 48
சூரிய கிரண், நடிகர் மட்டுமல்ல, அவர் இயக்குனரும் கூட.
தமிழ் சினிமாவில், மௌன கீதங்கள், படிக்காதவன், போன்ற ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சூரிய கிரண், பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரின் சகோதரி, பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதா.
சூரிய கிரண், தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
embed
நடிகர் சூரிய கிரண் காலமானார்
Director #SuryaKiran has passed away due to jaundice. He directed telugu films, Satyam, Raju Bhai and a few others. He was also a former contestant on Biggboss Telugu. Om Shanti.#SuryaKiran #RIP pic.twitter.com/Ygcihrn4tX— Cinemabujjulu (@Cinemabujjulu) March 11, 2024