துபாயில் கார் ரேசிங்கிற்காக தீவிர பயிற்சியில் நடிகர் அஜித்; வைரலாகும் காணொளி
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித் குமார் சமீபத்தில் சிங்கப்பூரில் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டு விடுமுறையை கழித்து விட்டு, துபாய் சென்றடைந்தார்.
அங்கே கார் ரேஸிங்கிற்கான தீவிரமான பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
அவருடைய திரைப்பட பணிகள் அனைத்தையும் முடித்த கையேடு சிங்கப்பூர் பறந்த அஜித் இரு தினங்களுக்கு முன்னர் சென்னையை அடைந்தார்.
இருப்பினும் அங்கிருந்து அவர் நேரே துபாய் சென்று அடைந்தார்.
பிட் லுக்கில் ஏர்போர்ட்டில் வலம் வந்த அஜித்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவிய நிலையில், அவர் கார் ரேஸிங் சர்க்யூட்டில் அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் தன்னுடைய சக ரேஸிங் வீரர்களுடன் தீவிர உரையாடலில் ஈடுபட்டுள்ளதையும், சைக்ளிங் பயிற்சி மேற்கொள்வதையும் பார்க்க முடிகிறது.
embed
Twitter Post
Remembering 96 title song 😍#Ajithkumar𓃵 ♥️ pic.twitter.com/j7vV2ysav9— Tamil Cinema (@tamil_cinima) January 7, 2025
குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு
'விடாமுயற்சி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கடும் மன வருத்தத்தில் இருந்த அஜித்தின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக மற்றொரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.
அதன்படி 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீடும் பொங்கல் வெளியீட்டாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், 'விடாமுயற்சி' படத்தின் வெளியீடு இருந்ததால், அதனை தவிர்த்து 'குட் பேட் அக்லி' படத்தின் பணிகள் தாமதமாகின.
தற்போது 'விடாமுயற்சி' எப்போது வெளியானாலும், 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ஆம் தேதியில் வெளியிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.