Page Loader
நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' OTTயில் வெளியாகும் தேதி அறிவிப்பு; விவரங்கள் உள்ளே!
'விடாமுயற்சி' OTTயில் வெளியாகும் தேதி அறிவிப்பு

நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' OTTயில் வெளியாகும் தேதி அறிவிப்பு; விவரங்கள் உள்ளே!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2025
04:04 pm

செய்தி முன்னோட்டம்

மகிழ் திருமேனி இயக்கிய அஜித்தின் ஆக்‌ஷன்-த்ரில்லர் படமான, 'விடாமுயற்சி' ஓடிடியில் வெளியாகும் தேதி தற்போது வெளியாகியுள்ளது. பல தடைகள் தாண்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் திரைக்கு வந்த விடாமுயற்சி, வரும் மார்ச் 3ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது என்கிறது அறிக்கைகள். படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதால், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இப்படத்தால் குறிப்பிடத்தக்க வகையில் ஈர்க்கப்படவில்லை. லைகா தயாரிப்பில் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளாவிய வசூல் ரூ.150 கோடிக்கும் குறைவாகவே இருந்தது.'

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post