பண மோசடி புகார்- ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ்
பண மோசடி செய்து விட்டதாக தன் மீது புகார் அளித்திருந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏஆர் ரஹ்மான் மீது பண மோசடி புகார் வழங்கப்பட்டிருந்தது. அந்த புகாரால் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாக ஏஆர் ரஹ்மான் தற்போது நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் மூன்று நாட்களுக்குள் புகாரை வாபஸ் பெற்று, தவறுக்கு மன்னிப்பு கோரவும், இல்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அளித்த புகார்
இச்சம்பவம் குறித்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் அளித்த புகாரில், கடந்த 2018 ஆம் ஆண்டு சங்கத்தின் ஆண்டு விழாவிற்கு இசை நிகழ்ச்சி நடத்த ஏ ஆர் ரஹ்மானிட ம் ₹29.50 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டது. அரசு அனுமதி அளிக்காததால் இந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. முன்பனத்தை திருப்பி கேட்ட போது ஏஆர் ரஹ்மான் சார்பில் கொடுத்த முன்பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது. அந்த காசோலை வங்கியில் பவுன்ஸ் ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏ ஆர் ரகுமான் மோசடி செய்து விட்டதாக அச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி செந்தில் என்பவர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.