LOADING...
இன்று முதல் அமலாகிறது டிரம்ப்பின் 50% வரிகள்; எதிர்கொள்ள தயாராகும் இந்தியா
இன்று முதல் அமலாகிறது டிரம்ப்பின் 50% வரிகள்

இன்று முதல் அமலாகிறது டிரம்ப்பின் 50% வரிகள்; எதிர்கொள்ள தயாராகும் இந்தியா

எழுதியவர் Venkatalakshmi V
Aug 27, 2025
08:38 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு 50% வரியை இன்று முதல் விதிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 9:31 (IST) மணிமுதல் அமலுக்கு வருகிறது. இந்த நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையே வர்த்தக பதட்டத்தை உருவாக்கியுள்ளது. GTRI (Global Trade Research Initiative)-ன் மதிப்பீட்டுப்படி, இந்த வரி உயர்வு இந்தியாவின் 60.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியை பாதிக்கலாம். குறிப்பாக தொழிலாளர் சார்ந்த துறைகள் - ஜவுளி, நகைகள், இறால், கம்பளங்கள் போன்றவை - 70% வரை ஏற்றுமதி இழக்கக்கூடும். இது மில்லியன் கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு தாக்கம் ஏற்படுத்தும்.

துறைகள்

டிரம்ப் வரிகளால் அதிகமாக பாதிக்கப்படும் துறைகள்

இந்த வரிகள், அமெரிக்காவிற்கான இந்திய ஏற்றுமதியின் 66% (சுமார் $86.5 பில்லியன்)ஐ உள்ளடக்கியவை. வரிகள் தொடர்ந்தால், ஏற்றுமதி $49.6 பில்லியனாக குறையலாம். இந்நிலையில், சீனா, வியட்நாம், மெக்சிகோ போன்ற நாடுகள் அந்த இடத்தை நிரப்பி விடும் ஆபத்தும் உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர், டிரம்ப் நிர்வாகம், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தது. இது தற்போது இருக்கும் வரிகளுடன் சேர்த்து மொத்தம் 50% ஆகும். டிரம்பின் கூற்றுப்படி, இது ரஷ்யாவை உக்ரைனுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு நகர்த்தும் நோக்கில் செய்யப்படுகிறது. டிரம்ப் வரிகளால் அதிகமாக பாதிக்கப்படும் துறைகள்: ஜவுளி, ஆடைகள், நகைகள், ரத்தினங்கள், இறால், தோல் பொருட்கள்

பதில்

இந்தியாவின் பதில்

அமெரிக்காவின் இந்த அதிக வரி விதிப்பிற்கு பிரதமர் மோடி பதிலளித்து,"இந்தியா எதற்கும் தலை வணங்காது. உள்நாட்டு உற்பத்தியாளர்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கூறினார். அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா ஒரு மாற்று வழியை கண்டுபிடிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார். ரஷ்யவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதால் தான் அதிக வரி என டிரம்ப் கூறிய நிலையில், ரஷ்ய தூதர், இந்தியா தொடர்ந்து "சிறந்த ஒப்பந்தம்" கிடைக்கும் இடங்களில் இருந்து எண்ணெய் வாங்கும் என்று கூறினார்.