Page Loader
ஒரே நாளில் ₹440 குறைவு; இன்றைய (ஜூன் 20) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய (ஜூன் 20) தங்கம் விலை நிலவரம்

ஒரே நாளில் ₹440 குறைவு; இன்றைய (ஜூன் 20) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 20, 2025
10:25 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 20) சரிவை சந்தித்துள்ளது.

வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹55 குறைந்து ₹9,210 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹440 குறைந்து ₹73,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹60 குறைந்து ₹10,048 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹480 குறைந்து, ₹80,384 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் சரிவு

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

18 காரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹45 குறைந்து, தற்போது ஒரு கிராமுக்கு ₹7,580 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹360 குறைந்து ₹60640 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது. வெள்ளி விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி ₹2 குறைந்து ஒரு கிராமுக்கு ₹120 ஆகவும், ஒரு கிலோவுக்கு ₹1,20,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

இதற்கிடையே, தங்கத்தின் விலையில் நீடிக்கும் ஏற்ற இறக்கம் நீடித்து வரும் நிலையில், தற்போதைய ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் உள்ளிட்ட சர்வதேச சூழல்கள் காரணமாக, இன்னும் சில காலத்திற்கு இதேபோன்ற நிலையே நீடிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.