
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு நிம்மதி; இன்றைய (ஜூன் 6) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
செய்தி முன்னோட்டம்
மே மாதத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து, ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் தங்கத்தின் விலை நிலையான உயர்வைக் கண்டு வருகிறது.
முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை எட்டிய பின்னர், 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ₹74,000 ஐத் தாண்டிய பிறகு, விலைகள் சற்று குறைந்துவிட்டன.
இருப்பினும், இந்த போக்கு தலைகீழாக மாறி, ஜூன் மாத தொடக்கத்தில் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
வியாழக்கிழமை (ஜூன் 5), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ₹40 அதிகரித்து, தற்போது ₹9,130க்கு விற்பனையானது.
மேலும், ஒரு சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹73,040 ஆக விற்பனையானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி, அதே விலை நீடிக்கிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையிலும் மாற்றமில்லை
இதேபோல், 18 காரட் தங்கமும் எந்த மாற்றமும் இல்லாமல், வெள்ளிக்கிழமை ஒரு கிராமுக்கு ₹7,490 ஆகவும், ஒரு சவரனுக்கு ₹80 உயர்ந்து ₹54,920 ஆகவும் விற்பனையாகிறது.
மேலும், சமீப காலமாக நிலையாக இருக்கும் வெள்ளி விலையும் வெள்ளிக்கிழமை எந்த மாற்றமும் இல்லாமல், வியாழக்கிழமை இருந்த விலையே நீடிக்கிறது.
இதன்படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை தொடர்ந்து ₹114 ஆகவும், ஒரு கிலோகிராம் விலை ₹1,14,000 ஆகவும் உள்ளது.
இதற்கிடையே, சர்வதேச பொருளாதார நடப்புகள், முதலீட்டாளர்களின் தேவை மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகள் ஆகியவை தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.