Loading...
டாடா சன்ஸ் அடுத்த தலைவராக அடிபடும் டிவி நரேந்திரன்; யார் இவர்? திருச்சிக்கும் இவருக்கும் இப்படி ஒரு தொடர்பா?
டாடா சன்ஸ் அடுத்த தலைவராக டிவி நரேந்திரனின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது

டாடா சன்ஸ் அடுத்த தலைவராக அடிபடும் டிவி நரேந்திரன்; யார் இவர்? திருச்சிக்கும் இவருக்கும் இப்படி ஒரு தொடர்பா?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2026
05:32 pm

செய்தி முன்னோட்டம்

டாடா குழுமத்தின் தலைமையகமான 'பாம்பே ஹவுஸில்' என். சந்திரசேகரனின் முடிவைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் அமைப்பின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த வாரிசு விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. இந்த போட்டியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான டிவி நரேந்திரனின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது. இருப்பினும், அடுத்த தலைவர் குறித்து டாடா சன்ஸ் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், தொழில்துறை வட்டாரங்களில் பரவி வரும் பல பெயர்களில் டிவி நரேந்திரனும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்கள்

யார் இந்த டிவி நரேந்திரன்?

டாடா குழுமத்தில் மிக நீண்ட அனுபவமும் திறமையும் கொண்ட நிர்வாகிகளில் ஒருவர் டிவி நரேந்திரன்.

திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (NIT) பொறியியல் பட்டமும், கொல்கத்தா ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பட்டமும் பெற்றவர்.

1988-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் இணைந்து தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். கடந்த 40 ஆண்டுகளில் விற்பனை, சந்தைப்படுத்தல், சர்வதேச வணிகம் மற்றும் சர்வதேச தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

தாய்லாந்தில் கணிசமான காலத்தை செலவிட்டு தென்கிழக்கு ஆசியாவில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் சந்தையை வலுப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

சாதனை

டாடா ஸ்டீலை மீண்டெழச் செய்த சாதனை

2013-ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக டிவி நரேந்திரன் பொறுப்பேற்றபோது, உலகளாவிய எஃகு சந்தையின் ஸ்திரமற்ற தன்மை, அதிகப்படியான கடன் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் கையகப்படுத்தலால் எழுந்த நிதி நெருக்கடி எனப் பல சவால்களை அந்நிறுவனம் சந்தித்து வந்தது.

இவரது தொலைநோக்குப் பார்வையிலான தலைமையின் கீழ், கடன்களைக் குறைத்தல், பணப்புழக்கத்தை சீரமைத்தல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிகரித்தல் மற்றும் இந்தியச் சந்தையில் டாடா ஸ்டீலின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துதல் எனப் பல்வேறு சாதனைகளை நிறுவனம் எட்டியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT