LOADING...
ஸ்விக்கி, ஜொமாட்டோ கட்டணங்கள் அதிரடி உயர்வு - இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் செலவு
ஜொமாட்டோவை தொடர்ந்து தற்போது ஸ்விக்கியும் தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது

ஸ்விக்கி, ஜொமாட்டோ கட்டணங்கள் அதிரடி உயர்வு - இனி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதல் செலவு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 24, 2026
02:26 pm

செய்தி முன்னோட்டம்

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில், முன்னணி நிறுவனங்களான ஜொமாட்டோவை தொடர்ந்து தற்போது ஸ்விக்கியும் தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, ஸ்விக்கி ஒரு ஆர்டருக்கான பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹14.99-லிருந்து ஜிஎஸ்டி உட்பட ₹17.58 ஆக ஸ்விக்கி உயர்த்தியுள்ளது. இது சுமார் 17% உயர்வாகும். முன்னதாக Zomato நிறுவனம் தனது கட்டணத்தை ₹2.40 உயர்த்தி, வரிக்கு முன் ₹12.50-லிருந்து ₹14.90 ஆக அதிகரித்துள்ளது. வரிகளை சேர்த்தால் இரண்டு நிறுவனங்களின் கட்டணமும் ஏறக்குறைய சமமாகவே உள்ளது.

காரணம்

ஏன் இந்த உயர்வு?

தங்களது செயலியை பராமரிக்கவும், தொழில்நுட்ப செலவுகளை ஈடுகட்டவும் இந்தக் கட்டண உயர்வு அவசியமானது என்று இரு நிறுவனங்களும் விளக்கம் அளித்துள்ளன. ஒவ்வொரு ஆர்டரிலும் வசூலிக்கப்படும் இந்தச் சிறிய தொகை, மாத இறுதியில் அடிக்கடி ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும். ஒருபுறம் இந்த ஜாம்பவான் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி வரும் வேளையில், மறுபுறம் 'ராபிடோ' நிறுவனம் பெங்களூருவில் 'ஓன்லி' என்ற புதிய உணவு விநியோக சேவையைத் தொடங்கியுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் டெலிவரி கட்டணங்களுடன் இந்த பிளாட்ஃபார்ம் கட்டணமும் சேர்வதால், நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஆர்டர்களைக் குறைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement