Loading...
8 வார சரிவுக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெற்ற இந்திய பங்குச் சந்தை: வங்கிகளால் புது எழுச்சி
8 வார சரிவுக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெற்ற இந்திய பங்குச்சந்தை

8 வார சரிவுக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெற்ற இந்திய பங்குச் சந்தை: வங்கிகளால் புது எழுச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 05, 2026
10:15 am

செய்தி முன்னோட்டம்

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக 8 வாரங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், திங்கட்கிழமை (அக்டோபர் 5) வர்த்தகத் தொடக்கத்தில் வலுவான மீட்சியைக் கண்டுள்ளன. சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 72,322 புள்ளிகளிலும், நிஃப்டி 114 புள்ளிகள் உயர்ந்து 22,536 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. வங்கி மற்றும் நிதித் துறைப் பங்குகளின் எழுச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தாது என்ற எதிர்பார்ப்பு ஆகியவை பங்குச் சந்தையின் இந்த மீட்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

வங்கிகள்

வங்கி பங்குகள் முன்னணி மற்றும் புதிய தலைமை நிர்வாகி நியமனம்

வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த பங்குகள் அதிகபட்ச லாபத்தை பதிவு செய்து சந்தைக்கு வலுவான ஆதரவை அளித்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் 3.12%, எஸ்பிஐ 1.46% மற்றும் எச்டிஎஃப்சி வங்கி 1.05% வரை உயர்ந்து வர்த்தகமாகின.

ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனுப் பக்சி, எச்டிஎஃப்சி வங்கியின் புதிய எம்பி மற்றும் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கியின் வெளி நபர் ஒருவர் இந்த உயரிய பதவிக்குத் தேர்வாகியுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இச்செய்தி பங்குச் சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் நாட்டின் பொருளாதார நிலை

சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.83% சரிந்து 101.40 டாலராகக் குறைந்துள்ளது.

எண்ணெய் விலை குறைவது இந்தியாவின் இறக்குமதி செலவு மற்றும் பணவீக்க அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

மேலும், செப்டம்பர் மாத வாகன விற்பனை எண்கள் சிறப்பாகப் பதிவாகியுள்ளதும், நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் வலுவாக உள்ளதையே உணர்த்துகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனைத் தொடர்ந்த போதிலும், பெரு நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலையில் கிடைப்பது கூடுதல் சரிவைத் தடுத்துள்ளது.

ADVERTISEMENT

ஆர்பிஐ

ஆர்பிஐ வட்டி விகிதக் கூட்டம் மற்றும் சந்தை எதிர்பார்ப்புகள்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நாணயக் கொள்கைக் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 7 அன்று வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், ஆர்பிஐ 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை ஏற்கனவே இந்த மாற்றத்தைக் கணித்துள்ளதால், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளும் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

இருப்பினும், வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து மற்றும் உலகளாவிய பாண்ட் வட்டி விகிதத்தைப் பொறுத்தே சந்தையின் அடுத்தகட்டப் போக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT