கர்நாடக அரசின் இடஒதுக்கீடு மசோதாவை ரத்து செய்ய வேண்டும் : நாஸ்காம்
தனியார் நிறுவனங்களில், நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பணிகளில் 70 சதவீதமும் கன்னட மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். இந்த மோசதவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பல தனியார் சாப்ட்வேர் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய அமைப்பான நாஸ்காம் இந்த மோசதாவை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தியள்ளது. இது குறித்து NASSCOM அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
NASSCOM அறிக்கை
நிறுவனங்களை வேறு மாநிலங்களை நோக்கி நகர்த்தும் முடிவு என்கிறது நாஸ்காம்
இது குறித்து நாஸ்காம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த கட்டுப்பாடுகள், பல வெளிநாட்டு நிறுவனங்களை, திறமையாளர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கி, முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யும்" என தெரிவித்துள்ளது. "தொழில்நுட்பத் துறையானது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த மசோதா முன்னேற்றத்தை மாற்றியமைக்கும், நிறுவனங்களையும், பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களை முடக்கவும் வழிவகுக்கும்". "குறிப்பாக GCC போன்ற பல உலகளாவிய நிறுவனங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்பும் இந்த தருணத்தில் இந்த மசோதா அதற்கு தடையாக இருக்கும்" என்கிறது. கர்நாடக அரசாங்கத்தின் இடஒதுக்கீடு நடவடிக்கை, தொழில்துறை தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. இந்த நடவடிக்கை திறமை மற்றும் முதலீட்டை மாநிலத்திற்கு வரவிடாமல் தடுக்கும் என்று வாதிடுகின்றனர்.