NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா 
    அடுத்த செய்திக் கட்டுரை
    50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா 
    100% இடஒதுக்கீடு பற்றிய பதிவை நீக்கிய முதலமைச்சர் சித்தராமையா

    50% -70% தான் இடஒதுக்கீடு என கர்நாடக அமைச்சர் விளக்கம்; 100% இடஒதுக்கீடு மசோதா குறித்த பதிவை நீக்கிய சித்தராமையா 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 17, 2024
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடக அமைச்சரவை, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் 100% கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி காலையில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் , கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் மேலாண்மை அல்லாத பணிகளுக்கு 70 சதவீதமும், நிர்வாக நிலை ஊழியர்களுக்கு 50 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் இன்று காலை தெரிவித்தார்.

    முன்னதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தது போல 100 சதவீதம் இல்லை என்றும் அவர் தெளிவு படுத்தியுள்ளார்.

    எக்ஸ் பதிவு

    100 சதவீத இடஒதுக்கீடு பற்றிய பதிவை நீக்கிய முதலமைச்சர்

    முன்னதாக, திங்களன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, சமூக ஊடக தளமான X இல் முதலமைச்சர் இந்த முடிவை அறிவித்தார்.

    "அமைச்சரவை கூட்டத்தில்... மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகளிலும் 'சி மற்றும் டி' கிரேடு பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை ஆட்சேர்ப்பு செய்வது கட்டாயமாக்குவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

    தற்போது இந்த விவகாரம் சர்ச்சையானதை தொடர்ந்து, இந்த பதிவும் நீக்கப்பட்டது.

    இந்த தவறுதலாக எழுதப்பட்ட பதிவை அல்லது மசோதா மாற்றிஅமைக்கப்பட்டதா என்பது குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கர்நாடகா
    இட ஒதுக்கீடு
    சித்தராமையா

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கர்நாடகா

    கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் மசோதா தோற்கடிக்கப்பட்டது இந்தியா
    கர்நாடகாவில் காங்கிரஸ் 3 ராஜ்யசபா தொகுதிகளில் வெற்றி: குறுக்கு வாக்கு மூலம் பாஜக 1 தொகுதியில் வெற்றி இந்தியா
    'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா பெங்களூர்
    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேக நபரின் வீடியோ  பெங்களூர்

    இட ஒதுக்கீடு

    இடஒதுக்கீடு தொடர்பாக எடியூரப்பா வீட்டுக்கு வெளியே பெரும் போராட்டம் கர்நாடகா
    அமெரிக்காவில் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்சநீதிமன்றம், பராக் ஒபாமா வேதனை அமெரிக்கா
    பீகாரில் 65 சதவீதம் இட ஒதுக்கீடு; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் பீகார்

    சித்தராமையா

     5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆயத்தமாகும் கர்நாடக அரசு  இந்தியா
    கர்நாடகாவில் மாடுகளை வைத்து போராட்டம் நடத்தும் பாஜகவினர்: காரணம் என்ன  இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    பாஜகவின் மதமாற்ற சட்டம் ரத்து: கர்நாடக அரசு அதிரடி  கர்நாடகா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025