Loading...
30 நிமிடத்தில் ₹62,000 கோடி காலி; உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் சறுக்கிய என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்
உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் சறுக்கிய என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்

30 நிமிடத்தில் ₹62,000 கோடி காலி; உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் சறுக்கிய என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
11:26 am

செய்தி முன்னோட்டம்

சீன உளவு அமைப்பின் சந்தேகத்திற்குரிய நபருடனான தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் மற்றும் அந்நிய உளவு நடவடிக்கை குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பில் மாபெரும் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. Wall Street பங்குச்சந்தை தொடங்கிய முதல் 30 நிமிடங்களிலேயே ஜென்சன் ஹுவாங்கின் சொத்து மதிப்பு $7.4 பில்லியன் (சுமார் ₹62,000 கோடி) சரிந்து, $154.7 பில்லியனாக குறைந்துள்ளது என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கோடீஸ்வரர் பட்டியல்

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

இந்தத் திடீர் சொத்துச் சரிவால், உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்த ஜென்சன் ஹுவாங் 10-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

வாரன் பாஃபெட் மற்றும் லேரி எலிசன் ஆகியோர் ஹுவாங்கை முந்திச் சென்றுள்ளனர்.

என்விடியா நிறுவனத்தின் 3.5 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைத் தனது வசம் வைத்துள்ள ஹுவாங், அந்நிறுவனத்தின் மிகப்பெரிய தனிநபர் பங்குதாரர் ஆவார்.

திங்கள்கிழமை ஒரே நாளில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 4.3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

இதன் மூலம் என்விடியாவின் சந்தை மதிப்பில் இருந்து $190 பில்லியன் (சுமார் ₹16 லட்சம் கோடி) துடைத்தெறியப்பட்டது.

முதலீட்டாளர்கள் வழக்கு

என்விடியா மற்றும் ஜென்சன் ஹுவாங் மீது முதலீட்டாளர்கள் வழக்கு

பங்குச்சந்தை சறுக்கலை தொடர்ந்து, சான் ஹோசே கலிபோர்னியா கூட்டாட்சி நீதிமன்றத்தில் என்விடியா நிறுவனம் மற்றும் அதன் சி.இ.ஓ ஜென்சன் ஹுவாங் மீது பங்குதாரர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட உறவு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய தேசியப் பாதுகாப்பு ஆபத்துகள் குறித்த முக்கியத் தகவல்களை முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் மறைத்துவிட்டது.

இந்த மறைப்பால் முதலீட்டாளர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, நிறுவனத்தின் பெயர் மற்றும் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனப் பங்குதாரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்நிய உளவு அமைப்பின் தலையீடு குறித்து சுயாதீன வழக்கறிஞர்கள் குழு மூலம் உள் விசாரணை நடத்தப்படும் என என்விடியாவின் இயக்குநர் குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT