Page Loader
இந்தியாவில் முதல்முறையாக தேசிய வீட்டுப் பயண கணக்கெடுப்பை 2025இல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு
இந்திய ரயில்வே

இந்தியாவில் முதல்முறையாக தேசிய வீட்டுப் பயண கணக்கெடுப்பை 2025இல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 12, 2024
07:03 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அரசாங்கம் 2025ஆம் ஆண்டில் தனது முதல் தேசிய வீட்டுப் பயணக் கணக்கெடுப்பை (NHTS) நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியானது தேசிய மாதிரி ஆய்வுகளின் (NSS) 80வது சுற்றின் ஒரு பகுதியாக இருக்கும் என மனிகண்ட்ரோலில் இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் பயன்படுத்தும் பல்வேறு போக்குவரத்து முறைகளை ஆவணப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஜூலை 2025 முதல் இந்த கணக்கெடுப்பை முன்னெடுத்துச் செல்லும். இந்திய ரயில்வே அமைச்சகம் இந்த கணக்கெடுப்பை கோரியுள்ளது. சேகரிக்கப்பட்ட தரவுகளை பெட்டி தயாரிப்பை நிர்ணயிப்பதற்கு பயன்படுத்த உத்தேசித்துள்ளது.

நோக்கம்

தேசிய வீட்டு பயண கணக்கெடுப்பின் நோக்கம்

தேசிய வீட்டு பயண கணக்கெடுப்பின் நோக்கமானது தனிநபர்களை பல்வேறு வருமான வரம்புகள் மற்றும் அவர்களின் விருப்பமான போக்குவரத்து முறைகளில் இருந்து கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த கணக்கெடுப்பை ரயில்வே கூறியுள்ளதால், இது ரயில்வேயில் பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை வகையையும் அடையாளம் காண உதவும். இந்தியாவில் இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது இதுவே முதல்முறையாகும் என அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. NHTS உடன், அமைச்சகம் ஜனவரி 2025 முதல் சுகாதாரக் கணக்கெடுப்பையும், ஜூலை 2025 முதல் உள்நாட்டு சுற்றுலாச் செலவுக் கணக்கெடுப்பையும் நடத்த உள்ளது. உள்நாட்டு சுற்றுலா செலவின கணக்கெடுப்பு ஆரம்பத்தில் 2020 இல் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக தாமதமாகி தற்போது நடத்தப்பட உள்ளது.