ஒரே நாளில் ₹400 அதிபரிப்பு; மீண்டும் ₹59,000ஐ தாண்டியது ஆபரணத் தங்கத்தின் விலை
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா முழுவதும் வாங்குபவர்களுக்கு சவாலாக உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜனவரி 16) அன்று, சென்னையில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ₹7,390 ஆக உயர்ந்தது.
முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ஒரு சவரன் ₹400 அதிகரித்துள்ளது. மேலும், எட்டு கிராம் எடை கொண்ட ஒரு சவரன் இப்போது ₹59,120 ஆக உள்ளது.
இதேபோல், தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ₹8,056 ஆகவும், எட்டு கிராம் கொண்ட ஒரு சவரனுக்கு ₹64,448 ஆகவும் உயர்ந்தது.
மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களில் 22 காரட் தங்கத்தின் விலைகள் சிறிய மாறுபாடுகளுடன் கிட்டத்தட்ட இதே விலையைக் கொண்டுள்ளன.
வெள்ளி விலை
வெள்ளி விலை சற்று குறைவு
இதற்கிடையில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது, வாங்குபவர்களுக்கு சற்று நிம்மதி அளிக்கிறது.
வியாழக்கிழமை ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹103 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,03,000 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை முந்தைய நாளைக் காட்டிலும் ₹2,000 குறைந்துள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக உள்ள ஆபரணப் பொருட்களின் விலையில் கடந்த 10 நாட்களாக ஏற்ற இறக்கமான போக்கு நீடித்து வருகிறது.
தங்கத்தின் விலை சிறிய சரிவுகளுடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளியின் மதிப்பு அவ்வப்போது குறைகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் இருவரையும் பாதிக்கும் என்பதால், குறிப்பாக பண்டிகைக் காலங்களில், இந்த விலை நகர்வுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.