நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மீண்டும் ஷாக்: வாரத்தின் முதல் நாளே தங்கம் வெள்ளி விலைகள் அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (பிப்ரவரி 9) மீண்டும் உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹230 அதிகரித்து ₹14,650 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,840 அதிகரித்து ₹1,17,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹251 அதிகரித்து ₹15,982 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹2,008 அதிகரித்து ₹1,27,856 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் அதிகரிப்பு
18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹170 அதிகரித்து ₹12,520 ஆகவும், ஒரு சவரன் ₹1,360 அதிகரித்து ₹100,160 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் திங்கட்கிழமை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹15 அதிகரித்து ₹300.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.