Loading...
இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறியது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 26, 2026
10:26 am

செய்தி முன்னோட்டம்

தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை (நவம்பர் 26), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹120 அதிகரித்து ₹11,540 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹960 அதிகரித்து ₹92,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹131 அதிகரித்து ₹12,589 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,048 அதிகரித்து ₹1,00,712 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

அதன்படி 18 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹100 அதிகரித்து ₹9,445 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹800 அதிகரித்து ₹75,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வியாழக்கிழமை வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள் விலையிலேயே நீடிக்கிறது.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹165.00 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹1,65,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT