LOADING...
சவரனுக்கு ₹400 அதிகரிப்பு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சவரனுக்கு ₹400 அதிகரிப்பு; இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 20, 2026
10:13 am

செய்தி முன்னோட்டம்

ஆபரணத் தங்கம் விலை நேற்று தடாலடியாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 20), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹50 அதிகரித்து ₹13,950 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹400 அதிகரித்து ₹1,11,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹55 அதிகரித்து ₹15,218 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹440 அதிகரித்து ₹1,21,744 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை சரிவு

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹55 அதிகரித்து ₹11,640 ஆகவும், ஒரு சவரன் ₹440 அதிகரித்து ₹93,120 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே, வியாழக்கிழமை வெள்ளி விலை குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹260.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,60,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல், மத்திய கிழக்கு போர் காரணமாக தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து நிலையற்ற தன்மையிலேயே நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement